மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிராவோவிற்கு தமிழ் கலாச்சாரம் மீது எவ்வளவு ஈர்ப்பு பாருங்கள்! பிராவோவின் ஓப்பன் டாக்!
மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான பிராவோ டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகின்றார். இவர் கிரிக்கெட் ஆடுவதோடு, இசையிலும் மிகுந்த ஆர்வமிக்கவராக விளங்குகிறார்.
சென்னை அணிக்காக நீண்ட காலமாக விலையாடி வருவதால் டுவைன் பிராவோக்கு தமிழ் கலாச்சாரம், உணவு என அனைத்தும் பிடித்துவிட்டது. இந்தநிலையில் பிரபல பத்திரிகைக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், சென்னை அணியில் விளையாடி வருவதால் இங்குள்ள உணவுகள் மற்றும் கலாசாரம் மிகவும் பிடிக்கும்.
சித்திரம் பேசுதடி 2’ என்ற தமிழ் படத்தில் பாடி இருக்கிறேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் பாடும் ஆர்வம் எனக்கு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி அதிகம் கேள்விபட்டிருக்கிறேன், அவரை சந்திக்கும் ஆர்வம் இருக்கிறது. என்றாவது ஒருநாள் அவரை சந்திப்பேன் என கூறியுள்ளார்.
மேலும், தமிழ் படத்தில் நான் நடிப்பதற்கான பணியில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் ஆகியோர், தமிழில் ‘டுவிட்' செய்வதுபோல் நானும் விரைவில் தமிழை கற்றுக்கொண்டு டுவிட் செய்வேன் என கூறியுள்ளார்.