வெற்றியோடு கேதர் ஜாதவின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய சிஎஸ்கே வீரர்கள்; வைரலாகும் வீடியோ.!



chennai super kings - kethar jadav - birthday celebration

ஐபிஎல் சீசன் 12 நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 5 ஆவது லீக் போட்டியானது சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகளுக்கு 2வது போட்டியாக அமைந்தது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்த நிலையில் நேற்றைய போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர்.

டெல்லி கேப்பிடல் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்றது. டெல்லியை தாக்குப்பிடிக்குமா சிஎஸ்கே என்ற அனைவரின் எதிர்பார்ப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தனது அனுபவ பந்துவீச்சின் மூலமாக டெல்லி அணியை 147 ரன்களோடு கட்டுப்படுத்தியது.

IPL 2019

அதன்பிறகு ஆடவந்த சிஎஸ்கே வீரர்கள் வழக்கமான ஆட்டத்தை விட ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவே அதிரடியாகவே ரன்களை குவித்தனர். ஷேன் வாட்சன் 44 (26) சுரேஷ் ரெய்னா 30 (16) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக கேப்டன் தோனி கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



 

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் நேற்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரின் பிறந்த நாளை சென்னை அணி வீரர்கள் டெல்லி அணியின் வெற்றிக்கு பின், கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.