மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடைசி ஓவரில் கடுப்பான பொல்லார்ட்! கடைசி நிமிடத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!
ஐபில் சீசன் 12 இன்றுடன் முடிவடைகிறது. கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகள் இடையே கைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியின் வீரர் கிரண் பொல்லார்ட் அதிகபட்சமாக 25 பந்துலலில் 41 ரன் எடுத்தார்.
மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்துள்ளது. 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி இன்னும் சற்று நேரத்தில் களமிறங்கவுள்ளது. இந்நிலையில் கடைசி ஓவரில் ஒருசில பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றன.
கடைசி ஓவரை பிராவோ வீசினார். ஆடுமுனையில் பொல்லார்ட் பந்தை எதிர்கொண்டார். பிராவோ வீசிய முதல் மூன்று பந்துகளும் மிகவும் ஓரமாக, அகலபந்து போன்று வீசப்பட்டது. இதனால் பந்தை எதிர்கொள்ள முடியாதா பொல்லார்ட் கடுப்பாகி பேட்டை தலைக்கு மேல் தூக்கி வீசினார்.
மேலும் நான்காவது பந்தை அடிப்பதற்காக ஸ்டெம்பை விட்டு மிகவும் ஒதுங்கி அகலபந்து இடத்திற்கே சென்றுவிட்டார் பொல்லார்ட். பின்னர் நடுவர்கள் சென்று பொல்லார்டிடம் சமாதானம் பேசினர். முதல் மூன்று பந்துகளை டாட் பந்துகளாக வீசிய பிராவோ கடைசி இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை கொடுத்தார்.