மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடக்கத்திலையே உஷாரான முடிவெடுத்த தல தோணி! எதிர்பார்ப்பில் சென்னை அணி ரசிகர்கள்!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வருகிறது. மும்பை அணியுடன் இறுதி போட்டியில் விளையாடப்போவது யார் என்பதை முடிவு செய்யும் குவாலிபையர் 2 ஆட்டம் இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் இடையே நடைபெறுகிறது.
கைதராபாத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டம் இரவு 7 . 30 மணிக்கு தொடங்குகிறது. சென்னை, டெல்லி இரண்டு அணிகளுமே வலுவான நிலையில் இருப்பதால் இன்றைய ஆட்டம் நிச்சயம் பரபரப்பாக இருக்கும்.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாசில் சென்னை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது சென்னை அணியின் தோல்விக்கு முக்கியமான காரணங்களில் ஓன்று.
இன்று சென்னை அணி உஷாராக பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை அணியின் சிறப்பான ஆட்டமும், தோனியின் கேப்டன்சியும் இன்று சென்னை அணி வெற்றிபெற உதவுமா? சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.