திறந்த வெளிகளில் குழந்தைகள் விளையாடினால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இவ்வுளவா?.. அசத்தல் தகவல்.!!
குழந்தைகள் திறந்தவெளிகளில் விளையாடுவதால் உடலுக்கு நன்மை கிடைக்கிறது. எச்.டி.ஏ எனப்படும் மூளை பாதிப்பு மற்றும் பிற எதிர்கால நோய்களில் இருந்து அவர்கள் தப்பிக்க இயலும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நகர்ப்புற குழந்தைகள் மட்டுமல்லாது, கிராமப்புற குழந்தைகளும் நவீன யுகத்தில் உள்ள பொருட்களுக்கு தொடர்ந்து அடிமையானவண்ணம் இருக்கிறார்கள். செல்போன், லேப்டாப், டிவி, விடியோகேம் என்று அவர்களின் பிரதான பொழுதுபோக்கு தொடர்ந்து மாறிக்கொண்டு வருகிறது. இது மிகவும் ஆபத்தான விஷயம் என குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி திரைக்காட்சியில் மூழ்கி இருப்பதை விட, வெளியே சென்று திறந்த வெளியில் விளையாடினால் பார்வை திறன் மேம்படும். குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதால் பல சமூகம் சார்ந்த நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வார்கள். சிந்தனை திறனும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை, நடத்தை போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறன் அதிகரிக்கும்.
அவ்வப்போது வெளியே சென்று விளையாடி வரும் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோர்களை தொந்தரவு செய்வதில்லை. குழந்தைகளின் தனித்திறன், அறிவாற்றல் திரள் போன்றவை வளர்கிறது. சமூகத்தில் சிறந்த குழந்தையாக வளரும் வாய்ப்புகளும் கிடைக்கிறது. நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதால் மன அழுத்தம் குறைகிறது.
சுற்றுப்புறசூழலை நுகர்ந்தவாறு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை மேற்கொள்வதால் உடல் திடக்காதுரத்துடன் இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் வைட்டமின் டி பற்றாக்குறை, அவர்கள் வெளியே சென்று விளையாடி வருவதால் ஈடு செய்யப்படும். எதிர்காலத்தில் ஏற்படும் எலும்பு, இதய பிரச்சனை தவிர்க்கப்படும். சூரியன் வைட்டமின் டி சத்தை கொண்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.
இயற்கையான காற்றை சுவாசிப்பதால் குழந்தைகளின் கவனிக்கும் திறன் அதிகரிக்கும். எச்.டி.ஏ எனப்படும் மூளை பாதிப்பை ஏற்படுத்தும் நோய் தவிர்க்கப்படும். இதனால் குழந்தைகள் கவனமின்றி செயல்படுவது, பிறருடன் பேச மறுப்பது, பொருட்களை மறந்து வைப்பது, திடீர் கூச்சலிடுவது போன்றவை தவிர்க்கப்படும். திறந்தவெளி காற்று உடலுக்கு ஆரோக்கியமானது.