தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
விசுவாசம் படத்தில் உள்ள காட்சி போல் தங்கமங்கை கோமதி மீது ஊக்க மருந்து புகார்! நா.. எந்த தவறும் செய்யல..கெத்தாக நிற்கும் தமிழச்சி!
கடந்த மாதம் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றவர் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து. தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவை, தமிழகத்தில் அனைவரும் கொண்டாடினர். இதனையடுத்து கோமதி தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு போன்ற பொருட்களை பயன்படுத்தியதற்கான முகாந்திரம் இருப்பதால் அவருக்கு இடைக்கால தடை விதித்து இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது.
ஆசிய போட்டியில் போது ஊக்கமருந்து சோதனைக்காக கோமதியின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் நான்ட்ரோலோன் எனும் ஸ்டெராய்ட் மருந்தை அவர் எடுத்துக்கொண்டது உறுதியாகியுள்ளதாகவும் என ஆசிய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கோமதிக்கு இடைக்கால தடை விதிப்பதாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது.
மேலும் பி சாம்பிள் சோதனை செய்யப்படும் எனவும், அதில் கோமதி தோல்வியடைந்தால் வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கோமதி கூறுகையில், ஏதேதோ பெயர்களில் ஊக்க மருந்து இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் தனக்கு ஊக்கமருந்து என்றால் என்ன வென்றே தெரியாது. அந்தப் பெயர்களை எல்லாம் தான் கேள்விப்பட்டதே இல்லை.
நான் ஊக்கமருந்து எடுக்கவில்லை, அதனால் நம்பிக்கையுடன் உள்ளேன். பி சாம்பிள் முடிவுக்காக காத்திருக்கிறேன். அந்த முடிவில், எனக்கு எந்த பிரச்சினையும் வராது என நம்பிக்கையுடன் இருக்கிறேன் என தமிழச்சி கோமதி தெரிவித்துள்ளார்.