தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
3வது அம்பெயர் தூக்கு போட்டு செத்துவிடுவார்! தோனியின் அவுட்டால் தோனி ரசிகனின் குமுறல்! வைரல் வீடியோ!
ஐபில் சீசன் 12 நேற்றுடன் முடிவடைந்தது. கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகள் இடையே கைதராபாத்தில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்றைய ஆட்டம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். ஐபிஎல் போட்டி பள்ளி மாணவர்களை ஈர்க்கும் வகையில் தினந்தோறும் இரவு 8 மணிக்கும், விடுமுறை நாட்களில் மாலையில் ஒரு ஆட்டமும் நடைபெற்றது.
மும்பை அணியின் பொல்லார்ட் மட்டும் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளையும், ஷர்டுல் தாகூர், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். மும்பை அணியின் மொத்த ஓட்டம் சென்னை அணிக்கு எளிதான இலக்காக இருக்கும் என எதிர்பார்த்து வந்த நிலையில் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
150 என்ற சற்று எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் பிளசிஸ் இருவரும் சிறப்பாக ஆடினர். பிளசிஸ், ரெய்னா, ராய்டு என சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி 2 ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
தோனியின் ரன் அவுட் குறித்த முடிவை அறிவிப்பது மூன்றாவது நடுவர்களுக்கே கடினமாக அமைந்தது. தோணி அவுட்டா? இல்லையா? என இரண்டு அணி வீரர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு மூன்றாவது நடுவர் அவுட் என அறிவித்தார். அந்த அறிவிப்பு சென்னை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தொலைக்காட்சியில் அதனை பார்த்த ரசிகர்கள், தோனியின் ரன் அவுட் தவறான முடிவு என விமர்சித்து வந்தனர். சென்னை அணியின் தீவிர ரசிகன் தோனி அவுட் ஆனதை அடுத்து வீட்டில் அழுது கதறியுள்ளான். அந்த சிறுவனின் தாய் எவ்வளவோ சமாதானபடுத்தியும் சிறுவன் கேட்கவில்லை தேர்ட் அம்பேர் தூக்கு போட்டு செத்துவிடுவார் என கதறி அழுகிறான். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.