மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை அணியில் இருந்து விலகும் முக்கியமான வீரர்? இக்கட்டான நிலையில் சென்னை அணி.
சென்னை அணியில் இருந்து முக்கிய வீரர் ஒருவர் காயம் காரணமாக அணியில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபில் T20 2024 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 52 போட்டிகள் முடிந்துள்ளநிலையில், சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்து தற்போது புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடம் 5 வது இடத்தில் உள்ளது.
சென்னை அணிக்கு மீதமுள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலே சென்னை அணி அடுத்த சுற்றுக்கு எளிதாக தகுதி பெற்றுவிடும். இந்நிலையில் இன்று நடக்கவுள்ள போட்டியில் சென்னை அணி மீண்டும் பஞ்சாப் அணியுடன் விளையாட உள்ளது.
கடந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணியுடன் தோல்வியை தழுவியத்திற்கு சென்னை அணியின் முக்கியமான பந்து வீச்சாளர்கள் அனைவரும் காயம் காரணமாக விளையாடாமல் போனதும் ஒரு காரணம். இந்நிலையில் சென்னை அணி வீரர் தீபக் சாஹர் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தீபக் சாஹருக்கு ஏற்பட்டுள்ள காயம் இன்னும் குணமாகாத நிலையில், அவருக்கு காயம் தீவிரமாகிவருவதால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அணியின் முக்கியமான பந்து வீச்சாளர்களில் ஒருவரான தீபக் சாஹர் அணியில் இருந்து விலகுவது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.