மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எங்க வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை! உற்சாகத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட மாஸ் வீடியோ! செம குஷியான ரசிகர்கள்!
ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29-ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் பட்டம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதை முன்னிட்டு ஐபிஎல் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபற்று வருகின்றனர்.
இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த திங்களன்று சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டார். அவரை தொடர்ந்து நட்சத்திர ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னாவும் சென்னை வந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இவரை கண்ட தோனி ஆரத்தழுவி வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பான விடியோவை வெளியிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இது விக்ரமனின் படம், எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடல் வரியை பதிவிட்டுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் செம உற்சாகம் அடைந்துள்ளனர்.
Me3t and Gree7 - Everyday is Karthigai in our House, a film by Vikraman Sir. #StartTheWhistles 🦁💛 pic.twitter.com/sJz77Nnakr
— Chennai Super Kings (@ChennaiIPL) March 3, 2020