தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சூப்பர் ஓவர் வரை தொடர்ந்த பரபரப்பு!! கடைசி நிமிடத்தில் நடந்த திக்..திக்.! ரசிகர்களின் படபடப்பை அதிகரித்த செய்த டெல்லி - ஹைத்ராபாத் மேட்ச்..
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 20வது போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 53 ரன்கள் எடுத்திருந்தார். இதனையடுத்து160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது.
சன்ரைசர்ஸ் அணியில் அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் அவுட் ஆன நிலையில் வில்லியம்சன் மட்டும் நிலைத்து நின்று ஆடி 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது. இதனையடுத்து சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரராக வார்னர் மற்றும் வில்லியம்சன் களமிறங்கினர். சூப்பர் ஓவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அக்சர் படேல்வீசினார். அக்சர் படேல் சிறப்பாக பந்துவீசி வார்னர் மற்றும் வில்லியம்சன் 7 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதனையடுத்து டெல்லி அணியின் துவக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரிஷாப் பந்த் களமிறங்கினர். சன்ரைசர்ஸ் அணியில் இருந்து ரஷீத் கான் பந்தை வீசினார். சூப்பர் ஓவரில் டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.