மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொட்டும் பனியில் நடுநடுங்கிய மகள்! தோனி செய்த காரியத்தை பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருப்பவர் தல தோனி. இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் தமிழகத்தில் தோனிக்கென தனிரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவரை ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர். தோனி சென்னை அணியின் தலைவராக இருந்து பல முறை வெற்றி பெற்று பெருமை அடைய செய்துள்ளார்.
இவரது மனைவி சாக்ஷி. இருவரும் சிறந்த ஜோடியாக விளங்கி வருகின்றனர்.மேலும் இருவரும் ஒன்றாக பல விளம்பரங்களிலும் இணைந்து நடித்துள்ளனர். இவரது மகள் ஷிவா. தோனி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதனை போலவே அன்பான கணவர் மற்றும் தந்தையாவார். அவர் கிடைக்கும் நேரங்களில் தனது மகளுடன் நேரத்தை உற்சாகத்துடன் செலவிடுவார்.
இந்நிலையில் தோனி தற்போது தனது குடும்பத்துடன் சேர்ந்து பிரித்தானியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு குளிர்காலம் என்பதால் அதிகஅளவில் பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. மேலும் ஷிவா குளிரில் நடுங்கினாலும், அவரது தந்தையுடன் ஐஸ்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி செம உற்சாகத்துடன் விளையாடியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.