மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாத்தையும் ஸ்பூனில் எடுத்து ஊட்டி விட முடியாது... ஜடேஜா குறித்து தோனி என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா..!
2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணி தொடரின் ஆரம்பத்தில் இருந்தே கடும் தடுமாற்றம் கண்டு வந்தது. முதல் 8 போட்டிகளில் 6-ல் தோல்வி, 2-ல் மட்டுமே வெற்றி அடைந்தது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். இந்தநிலையில், சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரெனெ ஜடேஜா விலகினார்.
இதன் காரணமாக தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார். நேற்று நடந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், தோனி தலைமையிலான சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் பேசிய தோனி, கேப்டன் மாற்றத்தால் பெரிய மாற்றங்கள் இல்லை. எங்களுக்கு கிடைத்த இலக்கு நன்றாக இருந்தது, பனிப்பொழிவு இருப்பதால் பந்துவீச்சு நன்றாக இருக்க வேண்டும்.
நாங்கள் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றோம் மற்றும் ஆரம்ப ஓவர்களை பேட்டிங் மூலம் சிறப்பாகப் பயன்படுத்தினோம். கடந்த சீசனிலேயே ஜடேஜா இந்த ஆண்டு கேப்டனாக இருப்பார் என்று எனக்கு தெரியும். முதல் இரண்டு ஆட்டங்களுக்கு, நான் அவருடைய கேப்டன்சியை மேற்பார்வையிட்டேன், பின்னர் அவரை அனுமதித்தேன். அவர் தனது சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும் மற்றும் அவற்றுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். நீங்கள் அவர்களுக்கு எல்லாவற்றையும் ஸ்பூனில் எடுத்து ஊட்ட முடியாது.
நீங்கள் கேப்டனாக ஆனவுடன், நிறைய விஷயங்கள் உங்களை அழுத்தும். இது அந்த வீரரின் செயல்திறனைப் பாதித்து கேப்டன்சி சுமை அவர்களை ஆக்ரமிக்கலாம் என்று நான் நினைக்கிறேன். கேப்டன்சி அவரது தயாரிப்பு மற்றும் செயல்திறனை சவாலுக்குள்ளாக்கியது என்று நான் நினைக்கிறேன் என கூறினார்.