மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணீர் விட்டு அழுத தோனியின் மனைவி! சோகத்தில் மூழ்கிய சென்னை அணி ரசிகர்கள்!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. கோப்பையை வெல்ல சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளும் தலா மூன்று முறை ஐபில் கோப்பையை வென்றுள்ள நிலையில் இந்த முறை கோப்பையை வெல்லப்போவது யார் என்று இரண்டு அணி ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.
முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்தது. கிரண் பொல்லார்ட் அதிகபட்சமாக 41 ரன் எடுத்தார். 150 என்ற சற்று எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுப்ளஸி இருவரும் சிறப்பாக ஆடினர்.
ஒருகட்டத்தில் டுப்ளஸி, ரெய்னா, ராய்டு என சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோணி 2 ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார்.
தோனியின் ரன் அவுட் குறித்த முடிவை அறிவிப்பது மூன்றாவது நடுவர்களுக்கே கடினமாக அமைந்தது. தோணி அவுட்டா? இல்லையா? என இரண்டு அணி வீரர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தோணி அவுட்டாகவேண்டும் என்று மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானி கடவுளிடம் வேண்ட, தனது கணவர் அவுட்டாக கூடாது என தோனியின் மனைவி சாக்ஷி மறுபுறம் கடவுளை வேண்டிக்கொண்டிருந்தார்.
இறுதியில் தோணி அவுட் என முடிவு வந்ததும் தோனியின் மனைவி சாக்க்ஷி கண்ணீர் சிந்திய காட்சி சென்னை அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.