மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தினேஷ் கார்த்திக் என்ன இது? நேற்றைய போட்டியில் ஒட்டுமொத்த பேரையும் திரும்பி பார்க்கவைத்த தினேஷ் கார்த்திக்! வைரல் வீடியோ
கொல்கத்தா அணிக்காக விளையாடிவரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்தி நேற்றைய ஆட்டத்தில் பிடித்த கேட்ச் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. முதல் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடையும்நிலையில் இதுவரை மும்பை அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் ஏற்கனவே முதல் சுற்றில் இருந்து வெளியேறிவிட்டது.
இந்நிலையில் பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நான்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இன்றைய போட்டியில் ஏற்படும் முடிவை அடுத்தே எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போகிறது என்பது தெரியவரும்.
இந்நிலையில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நேற்றைய வாழ்வா சாவா போட்டியில், கொல்கத்தா அணி பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் மிக சிறப்பாக விளையாடி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. நேற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.
192 என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ராஜஸ்தான் வீரர் ஸ்டோக்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடிய நிலையில் ஸ்டோக்ஸ் அடித்த பந்தை கீப்பர் நின்ற தினேஷ் கார்த்திக் மிக அற்புதமாக கேட்ச் செய்தார்.
இந்த போட்டியின் திருப்புமுனை விக்கெட்டாக ஸ்டோக்ஸின் விக்கெட் அமைந்த நிலையில், அதனை சற்று தூரத்தில் இருந்தே தினேஷ் கார்த்திக் தாவி பிடித்தார். தினேஷ் கார்த்திக்கின் இந்த அபரா கேட்சை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
What a catch DK 😮😮😮#DK #dineshkartik #ipl #IPL2020 #IPLinUAE#kkr #KKRvRR #KKRvsRR#RRvsKKR #IPLT20 pic.twitter.com/4hF4QAMAYp
— IPL Videos (@iplvideos_) November 1, 2020