மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வருடங்கள் கழித்து தினேஷ் காத்திக்கிற்கு கிடைத்த வாய்ப்பு! என்ன விஷயம் தெரியுமா?
உலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடி வருகிறது. 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்வது உறுதியாகிவிடும்.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஜாதவ் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மற்றும் புவனேஸ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனனர். இதில் சிறப்பு என்னவென்றால் சுமார் 15 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு கிடைத்துள்ளது.
2004-ல் தோனி, சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திய அணிக்கு தேர்வானார் தினேஷ் கார்த்திக். 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தேர்வான தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. அதன்பிறகு 2011, 2015 உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர் தேர்வாகவில்லை.
இந்நிலையில் 15 வருடங்களுக்கு கழித்து பங்களாதேஷ் அணியுடனான இன்றைய ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு தினேஷ் கார்த்திக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.