3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
டிஎஸ்பி முகமது சிராஜ்; காவல் அதிகாரியாக பொறுப்பேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் நாயகன்.!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், நேற்று தெலுங்கானா மாநிலத்தின் துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பொறுப்பை பெற்றுக்கொண்டார். அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் டி20 உலகக்கோப்பையை தனதாக்கிய இந்திய அணிக்காக, முகமது சிராஜுக்கு குரூப்1 அரசுப்பதவி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
டிஎஸ்பி பொறுப்பேற்பு
இதனிடையே, தெலுங்கானா காவல்துறையில் டிஎஸ்பி பொறுப்புடன் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் நிலத்தினை அரசு ஒதுக்கி வழங்கி, அவருக்கு டிஎஸ்பி பொறுப்பையும் வழங்கி கௌரவித்தது.
அதன்படி, காவல்துறை தலைமை இயக்குனரின் மேற்பார்வையில், டிஎஸ்பி-ஆக முறைப்படி முகமது சிராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். டிஎஸ்பி அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள், தெலுங்கானா காவல்துறை இயக்குனர் ஜெனரல் ஜிதேந்தர் முகமது சிராஜுக்கு பதவியேற்பு செய்து வைத்தார். இதனிடையே, டிஎஸ்பி முகமது சிராஜின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
DSP MOHAMMAD SIRAJ ON DUTY. 🫡🇮🇳 pic.twitter.com/Vn39mq5T5G
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 12, 2024