மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது குடிப்பதில் தகராறு... ஏமானாக மாறிய நண்பர்கள்.!! இளைஞர் படுகொலை.!!
மதுரை அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட இளைஞரின் நண்பர்களை கைது செய்துள்ள காவல் துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
ஆட்டு கொட்டகையில் கொலை செய்யப்பட்ட விவேக்
மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த விவேக் என்ற இளைஞர் தனது வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையில் வைத்து கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
நண்பர்கள் கைது
இந்த கொலை தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் விவேக், அவரது நண்பர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரது நண்பர்களான கணியாண்டி, சீமான் மற்றும் மலைவீரன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கொலைக்கான காரணம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: சுற்றி வளைத்த கும்பல்... தலைமை ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்.!! 2 இளைஞர்கள் கைது.!!
போதை தகராறில் கொலை
தீபாவளி தினத்தன்று விவேக் மற்றும் அவரது 3 நண்பர்கள் ஒன்றாக மது அருந்தி இருக்கின்றனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு பகையாக மாறியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நண்பர்கள் 3 பேர் சேர்ந்து விவேக்கை கொலை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்... ஆசிரியர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்.!!