மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
WC பரபரப்பு: அரையிறுதிக்குள் யார்? இங்கிலாந்தின் இடத்தை பிடிக்க போராடும் ஆசியா அணிகள்!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.
ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை ஆடியுள்ள 7 லீக் ஆட்டங்களில் 4 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது. சாம்பியன் பட்டத்தை வெல்லும் வலுவான அணி என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது.
இங்கிலாந்திற்கு இன்னும் மீதமுள்ள 2 ஆட்டங்களும் இதுவரை தோல்வியையே சந்திக்காத இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் உள்ளன. தற்போதைய மனநிலையில் இந்த 2 அணிகளையும் இங்கிலாந்து வெல்லுமா என்பது சந்தேகம் தான். இந்த 2 போட்டிகளிலும் தோற்றால் வெறும் 8 புள்ளிகளே கிடைக்கும்.
இந்த தருணத்தில் தான் பங்களாதேஷ் அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பங்களாதேஷ் அணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் என 2 போட்டிகள் உள்ளன. இதில் ஒரு போட்டியில் வென்று இங்கிலாந்து அடுத்த 2 போட்டிகளிலும் தோற்றால் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி பங்களாதேஷ் அரையிறுதிக்கு நுழையலாம்.
அதோடு மட்டுமல்லாமல் இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மீதமுள்ள 3 போட்டிகளிலும் வென்றால் அவர்களுக்கும் அரையிறுதிக்கு வர வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்தின் இடத்தை பிடிக்க தற்போது கடுமையான போட்டி நிலவி வருகிறது.