கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட இந்தியா! அடித்து நொறுக்கும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்



England plays cracking shots

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் மற்றும் பெயர்ஸ்டோவ் ஆரம்பம் முதலே மிகவும் கவனமுடன் ஆடி வருகின்றனர்.

wc2019

இந்திய பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றும் முதல் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் துவக்க விக்கெட்டினை வீழ்த்த முடியவில்லை. பும்ரா, சமி, சாகல் என முன்னனி பவுலர்கள் முயன்றும் விக்கெட்டினை வீழ்த்த முடியவில்லை.

ஆனால் ஹார்டிக் பாண்டியா ஆட்டத்தின் 11 ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் ஜேசன் ராயின் க்ளவுஸில் பந்து பட்டு விக்கெட் கீப்பர் தோனி கேட்ச் பிடித்தார். அப்போது ஒரு நல்ல சத்தம் வந்தது. இந்திய வீரர்கள் விக்கெட் முறையிட அம்பயர் அவுட் இல்லை என்று கூறி அகலபந்து என அறிவித்தார். 

wc2019

கோலியும் சத்தம் வந்ததை கேட்டு ரிவியூ கேட்கலாமா என பவுலர் மற்றும் கீப்பர் தோனியிடம் ஆலோசனை செய்தார். ஆனால் தோனி சந்தேகமாக இருக்க இந்தியா ரிவியூ கேட்க தவறியது. பின்னர் ரீப்ளேயில் பந்து ஜேசன் ராயின் க்ளவுஸில் பட்டு சென்றதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்ட ஜேசன் ராய் அடுத்தடுத்து சிக்சர் மற்றும் நான்கு விளாசினார். அதனைத் தொடர்ந்து ஜேசன் ராய் மற்றும் பெயர்ஸ்டோவ் இருவரும் அதிரடியாக ஆடத் துவங்கிவிட்டனர். இந்திய அணி முதல் விக்கெட்டை கைப்பற்ற போராடி வருகிறது.