மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாருகிட்ட வெயிட் காட்டுறீங்க.! விக்கெட்டுக்களை தட்டி தூக்கிய தமிழக வீரர்! சொற்ப ரன்களில் சுருண்ட இங்கிலாந்து.!
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி 1முதல் இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்துள்ளது.
இதனையடுத்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. இறுதியில் இந்திய அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலையான 241 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது.
இதனையடுத்து இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லே இருவரும் களமிறங்கினர். துவக்க வீரர்கள் இருவரையும் இந்திய அணியின் தமிழக வீரர் அஸ்வின் அவுட் ஆக்கினார். அதிலும் இரண்டாவது இன்னிங்சின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின்.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 40 ரன்கள் சேர்த்தார். அந்த அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 6 விக்கெட்டுகளும், நதீம் 2 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா மற்றும் ஜாஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன்மூலம், இந்திய அணியின் வெற்றிபெற 420 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது சுப்மன் கில்லுடன், புஜாரா ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர்.