அடிவாங்கிய மெஸ்ஸிக்கு தண்டனையா?? கொந்தளிக்கும் ரசிகர்கள்!



fans-feel-for-messi-punishment

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியும், மேடெல் தலைமையிலான சிலி அணியும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் மோதியது. இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி வெற்றிப்பெற்றது.
 
அந்த போட்டியின் 37 வது நிமிடத்தில், சிலி அணியின் மெடெல், மெஸ்ஸியை சரமாரியாக தலையால் முட்டி தாக்கியுள்ளார். இதை தொடர்ந்து இரு அணி வீரர்களும், மைதானத்திலே மோதிக்கொண்டதால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



 

இந்தநிலையில் மோதலில் ஈடுபட்ட இரு அணித்தலைவர்களுக்கும் சிவப்பு அட்டை காண்பித்து போட்டியிலிருந்து வெளியேற்றினார் நடுவர். ஆனால் அங்கு நடந்த சம்பவத்தில் தன்னை தாக்கிய மேடெலை, திருப்பி தாக்காமல் அவரை தடுத்து, தன்னை பாதுகாத்துக் கொண்டார் மெஸ்ஸி.

ஆனால் மெஸ்ஸிக்கும் நடுவர் தவறாக சிவப்பு அட்டை காண்பிடித்து வெளியேற்றியதாக குற்றம்சாட்டும் ரசிகர்கள், நடுவரை கடுமையாக விமர்சித்து கொந்தளித்துள்ளனர். அந்த சண்டையில் மெஸ்ஸி ஒருத்தி துளி அளவுகூட தாக்கும் விதத்தில் நடந்துகொள்ளவில்லை. இந்த நிலையில்  நடுவர் இருவருக்கும் சிவப்பு அட்டை காண்பிடித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.