மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.! 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.! ஏமாற்றத்தில் ரசிகர்கள்.!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிவருகிறது. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில், முதல் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
2-வது நாளான நேற்று முன்தினம் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 217- ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது.
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் இருவரும் நிதானமாக ஆடினர். 3-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் வில்லியம்சன் 12 ரன்களுடனும், ரேஸ் டெய்லர் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இந்தநிலையில், 4-ஆம் நாள் ஆட்டம் இன்று துவங்க இருந்த நிலையில், சவுத்தாம்ப்டனில் மழை பெய்ததால் 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.