மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நேற்றைய போட்டியின் மூலம் புதிய உலக சாதனை படைத்த இலங்கை அணியின் இளம் வீரர்.!
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இலங்கை அணியும் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
நேற்றைய போட்டியில் இலங்கை பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹசரங்கா இத்தொடரில் இதுவரை 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், ஒரு டி20 உலகக் கோப்பை சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். இதற்குமுன் 2012-ல் அஜந்தா மெண்டீஸ் 15 விக்கெட்களை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.