மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போட்டியின் இடையே தவானை பார்த்து மண்டியிட்டு கைகூப்பி வணங்கிய ஹர்திக் பாண்டியா..!! ஓ.. இதுதான் காரணமா..!!
இந்திய அணி வீரர் தவானை பார்த்து ஹர்திக் பாண்டியா கையெடுத்து கும்பிட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி 48.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் அடித்தது.
இந்திய அணி சார்பாக பண்ட் அதிகபட்சமாக 78 ரன்களும், தவான் 67 , ஹர்திக் பாண்டியா 64 ரன்களும் அடித்தனர். இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கத்திலையே அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். சாம் கரண் மட்டும் நிதானமாக ஆடி அணியை வெற்றியின் விளிம்புவரை அழைத்துச்சென்றார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் அடித்து, 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. இதன்மூலம் T20 , டெஸ்ட், ஒருநாள் என அனைத்து தொடர்களிலும் இந்திய அணி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, ஸ்டோக்ஸ் 15 ரன்னில் இருந்த போது, அவர் கொடுத்த கேட்ச் ஒன்றை ஹர்திக் பாண்டியா மிஸ் செய்தார். இதனால் முந்தைய போட்டி போன்று ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெற செய்துவிடுவார் என்ற அச்சம் எழுந்தது.
இந்நிலையில் நடராஜன் வீசிய பந்தை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ், டீப் மிட் விக்கெட் திசையில் ஓங்கி அடித்தார். அப்போது அங்கு நின்ற ஷிகர் தவான் அதனை கேட்ச் செய்து ஸ்டோக்ஸை அவுட்டாக்கினார். இதனால் அனைத்து வீரர்களும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
இதுஒருபுரம் இருக்க, முதலில் ஸ்டோக்ஸ் கேட்சைத் தவற விட்ட ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவானைப் பார்த்து, கைகூப்பி வணங்கி, மைதானத்தில் விழுந்து வணங்கவும் செய்தார். தான் விட்ட கேட்சை சீக்கிரமே ஷிகர் தவான் பிடித்து, ஸ்டோக்சிற்கு முடிவு காட்டியதை எண்ணி அவர் மகிழ்ச்சியில் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
Reaction of Hardik pandya after gabbar taking the catch of ben stokes 😂😂#INDvENG pic.twitter.com/nGsDMu0gWz
— 👑 (@viratian18183) March 28, 2021
— Simran (@CowCorner9) March 28, 2021