மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கியூட் மகனுடன் கொஞ்சி விளையாடும் ஹர்திக் பாண்ட்யா! வீடியோவை பகிர்ந்த அவரது மனைவி.!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ஹார்டிக் பாண்ட்யா, அவ்வப்போது தனது பேமிலி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துவருவார். அதேபோல் அவரது மனைவி நட்டாஷாவும் அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.
இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்ட ஹர்திக் பாண்ட்யா தனது மகன் அகஸ்தியா பாண்ட்யாவுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார் அவரது மனைவி நட்டாஷா.
இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவிற்கு அதிகப்படியானோர் லைக்குகளை அள்ளி வழங்கி வருகின்றனர். விடியோவை பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே 2.6 லட்சத்துக்கும் மேலான லைக்ஸ்கள் குவிந்தன. மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.