பாண்டியா, கேஎல்.ராகுலுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்; பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மீண்டும் நோட்டீஸ்.!



harthik-pandeya---kl-rahul---tk-jayen-notice

சில மாதங்களுக்கு முன்பு, காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாண்டியா மற்றும் ராகுல் இருவரும் பெண்களின் வாழ்க்கை முறையை இழிவுபடுத்தும் விதமாகவும் இனவெறியை தூண்டும் வகையிலும் கருத்துகளை கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவாகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் கூறிய கருத்துக்கள் எந்த வகையிலாவது காயப்படுத்தி இருந்தால், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு வகையிலும் யாருடைய உணர்ச்சியையும் காயப்படுத்த நினைக்கவில்லை” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா பதிவிட்டிருந்தார்.

cricket

இந்நிலையில், இருவருக்கும் 2 போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடை விதித்தது. பாண்டியா, ராகுல் தாங்கள் பேசியதற்கு மன்னிப்பு கேட்டனர். பின்னர் அதை விலக்கிக் கொண்டு மீண்டும் விளையாட அனுமதித்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயினை நியமித்தது உச்ச நீதிமன்றம். டி.கே ஜெயின் அனுப்பிய நோட்டீஸின் படி ராகுல், பாண்டியா இருவரும் நேரில் வந்து விளக்கம் அளிக்கும் படி கூறி உள்ளார். 

தற்போது ஐபிஎல் 12வது சீசனில் பங்கேற்றுள்ள ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காகவும் கேஎல் ராகுல் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள். நேரில் சென்று ஆஜராகி விளக்கம் அளித்தால் இந்த சீசனில் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை உருவாகும் என்று தெரிகிறது.