ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுல் மீது போலீசார் வழக்கு பதிவு; மீண்டு வருவார்களா?



harthik-pandeya--klrahul--karan-jogar---police-case

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவித்த ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுலுக்கு 2 போட்டிகளில் தடைவிதித்து பிசிசிஐ உத்தரவிட்டது.

காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாண்டியா மற்றும் ராகுல் இருவரும் பெண்களின் வாழ்க்கை முறையை இழிவுபடுத்தும் விதமாகவும் இனவெறியை தூண்டும் வகையிலும் கருத்துகளை கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

harthik pondia

இந்த விவாகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் கூறிய கருத்துக்கள் எந்த வகையிலாவது காயப்படுத்தி இருந்தால், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு வகையிலும் யாருடைய உணர்ச்சியையும் காயப்படுத்த நினைக்கவில்லை” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா பதிவிட்டிருந்தார்.

harthik pondia

இந்நிலையில் 2 போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கிய பிறகு நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். இத்தொடரில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு பேருதவியாக விளங்கினார். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்த ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரண் ஜோகர் மீதும் ஜோத்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.