மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்த ஹர்த்திக் பாண்ட்யா.!
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இந்தநிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தநிலையில் தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை ஹர்த்திக் பாண்ட்யா தட்டிச் சென்றார்.
இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் 71 ரன்களும் எடுத்திருந்தார். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் நடந்த ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.