மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு போடப்பட்ட தடை! சோகத்தில் மூழ்கிய வீரர்களும், ரசிகர்களும்!
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலையீடு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது.
இந்தநிலையில் லண்டனில் நடந்த ஐ.சி.சியின் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற முடிவினால், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு ஐ.சி.சி இடைக்கால தடை விதித்தது.
இதனால், ஜிம்பாப்வே நாட்டுக்கு ஐ.சி.சியால் வழங்கப்பட்டு வந்த நிதி நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஐ.சி.சியின் தலைவர் கூறுகையில், ‘ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் நடப்பது எந்த வகையிலும் ஐ.சி.சியால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஐ.சி.சி விதிமுறைகளை மீறிய செயல்களுக்காக இந்த இடைக்கால தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த தடை காரணமாக, ஐ.சி.சி நடத்தும் எந்த விதமான போட்டியிலும் ஜிம்பாப்வே அணியால் கலந்து கொள்ள முடியாது.