மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#IndVsBan: இந்தியாவிற்கு எதிராக வேற லெவலில் புதிய சாதனை படைத்த ஷாஹிப் அல் ஹசன்.. மாஸ் சம்பவம் இதுதான்.!
2002ல் இங்கிலாந்து வீரரின் சாதனைக்கு பின், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் செய்த சாதனை தொடர்பான தகவல் உறுதியாகியுள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, இன்று வங்கதேசம் அணியுடன் முதல் ஒருநாள் தொடரில் போட்டியிட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 10 விக்கெட் இழப்பிற்கு 41.2 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 46 ஓவரில் 187 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. இந்த போட்டியில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாஹிப் அல் ஹசன் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அதாவது, அவர் இன்றைய போட்டியில் 10 ஓவரில் 36 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இடது கை பந்துவீச்சாளரில் சிறந்த புள்ளிவிபர சாதனைப்பற்றியலுக்கு ஷாஹிப் அல் ஹசனை கொண்டு சென்றுள்ளது.
கடந்த 2002ல் இந்தியா - இங்கிலாந்து அணிகளின் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லே கைகஸ், இந்தியாவை 10 ஓவரில் 57 ரன்கள் எடுக்கவிட்டு 5 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். தற்போது வங்கதேச அணி வீரரின் சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.