மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போட்டியில் சதம் அடித்ததும் கே.எல் ராகுல் கொடுத்த ரியாக்சன்.. என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் காட்சி..
இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கே.எல் ராகுல்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் 108 ரன்கள், கேப்டன் விராட்கோலி 66 , பண்ட் 77 ரன்கள் அடித்தனர்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 337 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக ஜானி பாரிஸ்டோவ் 124 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 99 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் இந்திய அணி சார்பாக சதம் அடித்த இந்திய அணி வீரர் கே.எல் ராகுல், தான் சதம் அடித்ததும் அவர் கொடுத்த ரியாக்சன் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. முன்னதாக இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4 T20 போட்டிகளில் கே. எல் ராகுல் மிக மோசமாக விளையாடினர். முதல் போட்டியில் 1 ரன், அடுத்த இரண்டு போட்டிகளில் டக்கவுட், நான்காவது போட்டியில் 14 ரன் அடித்த கே.எல் ராகுல் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஏன் இவர் இன்னும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுகிறார் என்றுகூட ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் ஒருநாள் போட்டியில் விளையாடிவரும் கே.எல் ராகுல் முதல் போட்டியில் அரைசதமும், நேற்றைய இரண்டாவது போட்டியில் சதம் அடித்து தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தனது பதிலை அவர்களுக்கு தெரிவிக்கும் விதமாக, "தேவையில்லாத விமர்சனங்கள் முன்வைப்போரின் கருத்துக்களை காதில் வாங்க மாட்டேன், அவர்களின் பேச்சுக்கு இந்த சதத்தில் பதில்அளித்தேன் என சைகையில் இரு காதுகளையும் மூடி பதில் அளித்தார்". இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
#IndvEng
— The Field (@thefield_in) March 26, 2021
KL Rahul on what his celebration means: It is just to shut out the noise, not to disrespect anyone. There are people out there who try to pull you down, at times you need to neglect them. So that's just a message to shut out that noise. pic.twitter.com/SxYXYWRlvt