மீண்டும் அதே தவறு.! மொத்த விக்கெட்டுகளையும் வாரிச்சுருட்டிய ஆஸ்திரேலியா.!



india lost all wickets

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று 2வது நாள் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை ரவீந்திர ஜடேஜா 40 ரன்களுடனும், கேப்டன் ரஹானே 104 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தபடி 82 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில்,  3 ஆம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் கேப்டன் ரகானே 112 ரன்கள் எடுத்தநிலையில்  ரன் அவுட் ஆனார். 

test

ரஹானே விக்கெட்டுக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரவீந்திர  ஜடேஜா 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 115.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணியை விட இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை பெற்றது. கடைசி 5 விக்கெட்களை வெறும் 49 ரன்களுக்கு இழந்தது. இந்திய அணியின் பின்வரிசை பேட்டிங் மோசமான நிலையில் இருப்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆனது.