அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
பதிலடி கொடுக்க காத்திருக்கும் ஆஸ்திரேலியா.! டாஸ் வென்ற இந்திய அணி.! பரபரப்பான ஆட்டம்.!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.
இதனையடுத்து இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. கான்பெரேராவில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தநிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இன்று விளையாடவிருக்கும் சிட்னி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு நடந்த முதல் இரு ஒரு நாள்போட்டிகளில் இரு அணியினரும் 300 ரன்களுக்கு மேல் எடுத்தனர்.
கடைசி ஒருநாள் போட்டி மற்றும் முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்ததால், அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மல்லுகட்டுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.