மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு ஸ்டெப் கூட மாறல.. அப்படியே விஜய்யை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கு.. வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட இந்திய வீராங்கனைகள்..
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த வீராங்கனைகள் நான்குபேர் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஸ்ரீமதி மந்தனா அதிரடியாக விளையாடி 80 ரன்களும் பூனம் 62 ரன்கள் எடுத்தனர்.
இதனை அடுத்து இந்திய அணி வெற்றிபெற்ற பிறகு, அதனை கொண்டாடும் விதமாக ஓய்வறையில் இந்திய மகளிர் அணியை சேர்ந்த நான்கு வீராங்கனைகள் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோவை இந்திய வீராங்கனைகளில் ஒருவரான வேதா கிருஷ்ணமூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் நான்கு வீராங்கனைக்கும் விஜய் போட்ட ஸ்டேப் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.