மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய அணியின் பயிற்சியாளர் யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கோலியின் ஆசை நிறைவேறியது!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ரவி சாஸ்திரியின் (57 வயது) பதவிக் காலம், இங்கிலாந்தில் நடந்த ஐசிசி உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.
இதனால் இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதனால் உலகில் இருந்து பல்வேறு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் விண்ணப்பித்தனர். இந்திய அணிக்கு பயிற்சியாளார் ஆக வேண்டுமென்றால், அவர்கள் ஐபிஎல் போன்ற தொடர்களில் குறித்த அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்க கூடாது என்ற விதிமுறையும் இருந்தது.
இதனால் ஐபிஎல்லில் குறிப்பிட்ட அணிகளில் பயிற்சியாளராக இருந்த சிலர், அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்து, இதற்காக விண்ணப்பித்தனர். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த 30 ஆம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து இன்று தலைமை பயிற்சியாளருக்கான தேர்வு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரர்கள், பயிற்சியாளர்கள் பலர் விண்ணப்பித்தனர். தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீடிக்க வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில், பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது. அதில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் ரவிசாஸ்திரியே தேர்வு செய்யப்பட்டுள்ளதால்பலரும் புலம்பல்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.