மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை.! 1000-ஆவது ஒருநாள் போட்டி.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
இந்தியா இன்று தனது 1000வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ளது.
இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி புதிய வரலாற்றை படைக்க இருக்கிறது. அதாவது இந்திய அணி 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற சாதனையை படைக்க உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய அணி முதல் முறையாக 1974-ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது. ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை உலகளவில் 28 அணிகளால் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. தற்போது ஒருநாள் ஆட்டத்தில் 1000-ஆவது போட்டியில் விளையாட உள்ள முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.