கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
அதாலபாலத்தில் இருந்த இந்திய அணி.! கடைசியாக இறங்கிய இருவரின் அதிரடி ஆட்டம்.! கிடுகிடுவென உயர்ந்த ரன்கள்.!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் கில் களமிறங்கினர்.
நிதானமாக ஆடிய ஷிகர் தவான் 27 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். சுப்மான் கில் 39 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய விராட் அதிரடியாக ஆடி 78 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா- ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்து பின்தங்கி இருந்த அணியை முன்னேற்றத்திற்கு கொண்டு சென்றனர். ஹர்திக் பாண்ட்யா 76 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தநிலையிலும், ரவீந்திர ஜடேஜா 50 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தநிலையிலும் இறுதிவரை அட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.