மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓய்வை அறிவித்த மகளிர் கிரிக்கெட் அணி ஜூலன் கோஸ்வாமி; சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்.!
இந்திய அணிக்காக விளையாடி பல பெருமைகளை சேர்ந்த ஜூலன் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி. இவர் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார். இந்தியாவின் உயரிய விருதுகளான அர்ஜுனா விருதையும் ஜூலன் பெற்றுள்ளார்.
மேலும், சிறந்த கிரிக்கட் வீராங்கனைகள் ஐசிசி விருதையும் பெற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கட் அணிக்காக விளையாடி 355 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில், ஜூலன் கோஸ்வாமி தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது அவரின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை இந்தியா முழுவதுமாக கைப்பற்றியுள்ள நிலையில், ஜூலனின் அறிவிப்பு பலரையும் வருத்தப்பட வைத்துளளது.