வாயைப்பிளக்கப்போகும் இந்தியத் திரையுலகம்; கங்குவா படம் குறித்து மனம்திறந்த சூர்யா.!
தோத்தாலும் ஜெயிச்சாலும் சென்னைதா கெத்து; லேட்டஸ்ட் புள்ளி பட்டியல் இதோ.!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏறக்குறைய ஐபில் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. தற்போதைய நிலவரப்படி நடப்பு சாம்பியான சென்னை அணி தரவரிசையில் 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மும்பை அணி 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
2019 ஐபிஎல் தொடரின் 44ஆவது ஆட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி, ஜடேஜா மற்றும் டூ ப்ளஸிஸ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதனால் நேற்றைய போட்டிக்கு சென்னை அணியின் கேப்டனானக சுரேஷ் ரெய்னா தலைமையேற்றார்.
இதில் ‘டாஸ்’ வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ரெய்னா முதலில் ‘பீல்டிங்’ தேர்வு’ செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா (67) அரைசதம் அடித்து கைகொடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய சென்னை அணிக்கு வாட்சன் (8), ரெய்னா (2), ராயுடு (0), ஜாதவ் (6) என ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அடுத்துவந்த வீரர்களில் முரளி விஜய் (38), பிராவோ (20), சாண்ட்னர் (22) ஆகியோரைத்தவிர யாரும் கைகொடுக்கவில்லை.
இதையடுத்து சென்னை அணி 17.4 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. நேற்றைய போட்டியில் தோற்றாலும் சென்னை அணி ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறது.