மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12வது ஐ.பி.எல் சீசனில் கலக்கிய வீரர்கள்! குவிந்துவரும் பாராட்டுகள்!
ஐபிஎல் சீசன் 12 நேற்றுடன் முடிவடைந்தது. கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகள் இடையே கைதராபாத்தில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்றைய ஆட்டம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட் பறிபோனதால் இறுதியில் சென்னை அணி மிகவும் கடினமான சூழலுக்கு சென்றது.
19.4வது பந்தில் வாட்சன் 80 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இறுதி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தில் மலிங்கா வீசிய சிறப்பான பந்தில் தகூர் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
12வது ஐ.பி.எல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், பல்வேறு பிரிவுகளில் வீரர்களுக்கும், அணிகளுக்கும் விருதுகள் வழங்கபட்டுள்ளது.
அதன் விவரங்கள்:
அதிக ரன்கள் குவித்த வீரர்: டேவிட் வார்னர் (692 ஓட்டங்கள்)
அதிவேக அரைசதம் அடித்த வீரர்: ஹர்திக் பாண்ட்யா (34 பந்துகளில் 91 ஓட்டங்கள்)
அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்: இம்ரான் தாஹிர் (26 விக்கெட்டுகள்)
ஆட்டநாயகன் விருது: பும்ரா (இறுதிப்போட்டி)
அதிக ஸ்ட்ரைக்ரேட் வீரர்: ஆந்த்ரே ரஸல் (510 ஓட்டங்கள், 204 ஸ்ட்ரைக் ரேட்)
ஸ்டைலிஷ் வீரர்: கே.எல்.ராகுல்
சிறந்த மைதானம்: பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானம்
சிறந்த கேட்ச்: பொல்லார்டு (மும்பை இந்தியன்ஸ்)