மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கம்பீர்: ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றுக்கு இந்த 4 அணிகள் தான் இடம்பெறும்; எந்தெந்த அணிகள் தெரியுமா?
இந்தியாவில் தற்சமயம் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதேசமயம் ஐபிஎல் போட்டி தொடரும் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வலர்களும் போட்டிகளைக் காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் தொடரானது 11 சீசன் முடிந்து 12வது சீசன் மார்ச் 23 அன்று துவங்குகிறது. இத்தொடர் முடிந்ததும் உலகக்கோப்பை போட்டியானது துவங்க இருப்பதால் அணிகளில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வீரர்களும் உலகக்கோப்பை போட்டித் தொடரில் இடம் பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தங்களின் திறமைகளை வெளிக்கொணர்வார்கள் என்பதால் ஒவ்வொரு போட்டிக்கும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில், இந்த சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என காம்பீர் கணித்துள்ளார். ஐபிஎல்லை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் குறித்த விவாதத்தில் இதுகுறித்து பேசிய காம்பீர், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என காம்பீர் தெரிவித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு காம்பீர் இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.