மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அனல்பறக்க இருக்கும் ஐபில் போட்டிகள்..! முதல் போட்டி யாருக்கு தெரியுமா.? வெளியானது அட்டவணை.!
இந்த மாதம் 19 ஆம் தேதியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்த மாதம் 19 ஆம் தேதியிலிருந்து போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் அணி வீரர்கள் அனைவரும் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுவிட்டனர். இருப்பினும் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் போட்டிக்கான அட்டவணை வெளியாகாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் போட்டிகள் நடைபெறும் அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. வரும் 19ம் தேதி அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இரவு ஏழு முப்பது மணிக்கு போட்டி தொடங்குகிறது.