மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விராட் கோலியை கலாய்த்த இஷான் கிஷன்! வைரலாகும் கலக்கல் வீடியோ!!
கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் அதிகம். மேலும் ஐபிஎல் ஆரம்பமானால் போதும் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் குவித்து விடும்.
'போற்றுவார் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும்' என்பதற்கு ஏற்ப ஹாட்டர்ஸ் எவ்வளவு பேர் இருந்தாலும், இவரை ஆதரிப்பதற்கு தனி பெரும் கூட்டம் எப்பொழுதும் இருக்கும். இவரது இந்த அபார வளர்ச்சிக்கு ரசிகர்களும் முக்கிய காரணம் என்றே கூறலாம்.
சமூகவலைத்தளம் முழுவதும் இவருக்கென்று பல ரசிகர் பக்கம் உள்ளது. இணையத்தில் எப்போதும் மிகவும் ட்ரெண்டாகவும், வைரலாகவும் இருப்பார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 258M ஆகும்.
இன்ஸ்டாகிராமில் அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களை கொண்ட ஒரே இந்தியர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மட்டுமே. சில மாதங்களுக்கு முன்பு நடந்த நட்சத்திர பேட்ஸ்மேன் புகைப்பட பகிர்வு தளத்தில் 250 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கடந்தார். இந்த மைல்கல்லை எட்டிய ஒரே இந்தியர் இவர்தான்.
இந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் விராட் கோலி நடப்பது போல் இஷான் கிஷன் நடந்து காட்டுகிறார். இதனை பார்த்த சுற்றி இருந்த ரசிகர்கள் ஆரவாரம் படுத்தினார்கள். பின் விராட் கோலியும் வேடிக்கையாக நடந்து மாற்றி மாற்றி கலாய்த்து கொண்டனர்.