மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.... மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய அதிரடி ஆட்டக்காரர்.!
கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சைப் பெற்று வந்ததால் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸிக்கு எதிரான தொடரில் ஜடேஜா பங்கேற்கவில்லை. காயம் காரணமாக ஓய்வில் இருந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவிருக்கும் அவர் பயிற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து ஜடேஜா கூறுகையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவுக்காக விளையாடவுள்ள நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். இலங்கை தொடருக்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இதற்காக பெங்களூருவில் பந்துவீச்சு, பேட்டிங் பயிற்சி செய்து வருகிறேன் என ஜடேஜா கூறியுள்ளார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான பயிற்சியில் இந்திய அணியில் இணைந்திருக்கும் ரவீந்திர ஜடேஜாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.