மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடைசி ஓவரில் வாணவேடிக்கை காட்டிய ஜடேஜா.! தரமான சம்பவம்.! முறியடிக்குமா கோலி படை.!
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று (இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து சென்னை அணியின் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு ப்ளசிஸ் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து டு பிளசிஸ் 41 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்ததாக களமிறங்கிய அம்பதி ராயுடு 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தநிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். கடைசி ஓவரில் மட்டும் ஜடேஜா 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார்., இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து பெங்களூரு அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.