மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடைசி நேரத்தில் நாங்கள் அவரை ரொம்ப நம்பினோம்.! விரக்தியில் பேசிய சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா.!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியும், சென்னை அணியும் நேற்று மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்தில் தடுமாறி முதல் 8 ஓவர்களில் 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அடுத்ததாக களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த ரஷித் கான் அதிரடியாக விளையாடினார்.
ஆட்டத்தின் இறுதி ஓவரில் குஜராத் அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது . ஜோர்டன் அந்த ஓவரை வீசினார். மில்லரின் அதிரடி ஆட்டத்தால் 9.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய சென்னை அணித்தலைவர் ஜடேஜா கூறுகையில், நாங்கள் சிறப்பாக தான் தொடக்கத்தை கொடுத்தோம். முதல் 6 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினோம்.
கடைசி கட்டத்தில் கிறிஸ் ஜோர்டன் யார்க்கர் சரியாக அமையும் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரால் எங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. டி20 கிரிக்கெட்டில் இதெல்லாம் வழக்கம் தான் என தெரிவித்துள்ளார்.