மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்கம் வென்று சாதனை படைத்த தீபிகா குமாரிக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து.!
பிரான்ஸ் நாட்டில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி நடந்தது. இதில், மகளிர் குழு, கலப்பு மற்றும் தனிநபர் ரிகர்வ் போட்டி ஆகிய 3 பிரிவுகளில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் தீபிகா குமாரி மற்றும் அட்டானு தாஸ் ஜோடி கலப்பு இரட்டையர் ரிகர்வ் பிரிவில் இறுதி போட்டியில் நெதர்லாந்து ஜோடியை எதிர்கொண்டது. இதில் 5-3 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இந்திய ஜோடி தங்க பதக்கம் வென்றது. பெண்களுக்கான அணியில் ரிகர்வ் பிரிவில் மெக்சிகோ அணியை 5-1 என தோற்கடித்து, தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பரி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
இதேபோன்று, மகளிர் தனிநபர் ரிகர்வ் போட்டியில் கலந்து கொண்ட தீபிகா குமாரி அதிலும் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார். இந்தநிலையில் திமுக எம்.பி கனிமொழி அவரது ட்விட்டர் பக்கத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை தீபிகா குமாரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைக்க வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.Congratulations and all the best for the Olympics. pic.twitter.com/H99e16qqsm
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 28, 2021