மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோலி, ரஹானே சிறப்பான ஆட்டம்; இந்திய அணி 189 ரன்களுக்கு 3 விக்கெட்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடேயேயான இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 9 ஆம் நாள் துவங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக அடுத்த நாள் ஆட்டம் ஆரம்பமானது. இந்த டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்றுவருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷாப் பந்த் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
டாஸ் வென்ற இங்கிலாந்து, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.
மாலை தேநீர் நேர இடைவெளி வரை இந்திய அணி 189 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் 35, லோகேஷ் ராகுல் 23 ரங்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த புஜாராவும் 14 ரன்களுக்கும் ஆட்டமிழக்க இந்திய 82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வழக்கம் போலவே தடுமாறியது.
பின்னர் கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரஹானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதமடித்துள்ளனர்.
தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 189 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் விராட் கோலி 51 ரன்களும், ரஹானே 53 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.