"யாருகிட்ட..!" 2 வருடங்களாக மனதில் இருந்த பகையை தீர்த்துக்கட்டிய விராட் கோலி!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸின் 16 ஆவது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் கெஸ்ரிக் வில்லியம்ஸ் வீசினார். அந்த ஓவரில் இரண்டாவது பந்தில் ஒரு நான்கை அடித்த கோலி அடுத்த பந்தில் ஒரு சிக்சரை விளாசினார்.
அப்போது திடீரென கோலி பாக்கெட்டில் இருந்து ஒரு நோட்டை எடுத்து குறிப்பது போல் ஆக்ரோஷமாக செய்கை காட்டினார். காரணம் வில்லியம்ஸ் சில சமயங்களில் விக்கெட் எடுத்த பிறகு இப்படி செய்வது வழக்கம்.
பின்னர் ஆட்டம் முடிந்த பிறகு பேசிய விராட் கோலி இதற்கு விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 2017ல் ஜமைக்காவில் நடைபெற்ற டி20 போட்டியின் போது நான் ஆட்டமிழந்த சமயத்தில் வில்லியம்ஸ் இப்படி தான் செய்தார்.
அதனை நினைவுபடுத்தவே நான் இன்று அப்படி செய்தேன். இதைப் போன்ற சம்பவங்கள் களத்தில் மட்டும் தான் நடக்கும். ஆட்டம் முடிந்த பிறகு வழக்கம்போல சகஜமாக பேசிக்கொள்வோம் என்றார்.
If u are Bad Than I'm Your dad Never ever Mess With King Kohli 👑#Virat 👑🔥🔥 Vintage Virat 🔥🔥 pic.twitter.com/wQwHk5ZEZs
— Wolverine (@SharanRebel) December 7, 2019