மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மோசமான சாதனை படைத்த இந்திய வீரர்! 336 ரன் அடித்தும் தோல்வி.. செம கடுப்பான ரசிகர்கள்...
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்களை கொடுத்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் குல்தீப் யாதவ்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் 108 ரன்களும், பண்ட் 77 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி 336 ரன்கள் அடித்ததால் நிச்சயம் இந்திய அணி வெற்றிபெறும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கி, இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜானி பேர்ஸ்டோவும், பென் ஸ்டோக்ஸும் இருவரின் பார்ட்னர்ஷிப்பில் இங்கிலாந்து அணி 165 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்தும் தோல்வி அடைந்தது கடும் ஏமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக இந்திய அணி பவுலர்கள் குல்தீப் யாதவ் மற்றும் குருணால் பாண்டியா இருவரும் ரசிகர்களின் மொத்த நம்பிக்கையையும் தவிடு பொடியாக்கினர். குல்தீப் யாதவ் வீசிய 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி வீரர்கள் மொத்தம் 8 சிக்ஸர் பறக்க விட்டனர்.
இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் குல்தீப் யாதவ். இதற்கு முன்னதாக 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் வினய் குமார் 7 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்ததே இந்திய பந்துவீச்சாளரின் மோசமான சாதனையாக இருந்தது.
தற்போது குல்தீப் யாதவ் 8 சிக்ஸர்கள் விட்டுக்கொடுத்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். மேலும் நேற்றைய போட்டியில் 10 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் மொத்தமாக 84 ரன்களை தாரைவார்த்தார். அதேபோல் குருணால் பாண்டியா 6 ஓவர்களில் 72 ரன்களை தாரை வார்த்தார். குருணால் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் 16 ஓவர்களில் மொத்தம் 156 ரன்களை வாரி வழங்கினர்.